நாகை அருகே மீத்தேன் எதிர்ப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், இயற்கை மற்றும் கனிம வளம் பாதுகாப்பு மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.
மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட்டு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அணு உலை திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் எனவும் கூறினார்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - வேல்முருகன் அதேபோல், காஷ்மீர் பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்குச் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்