நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அகில இந்திய மறை மாவட்ட அருட் தந்தையர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கத்தோலிக்க தேவலாய அன்பியங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டினை, இந்திய ஆயர் பேரவை தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். நேற்று நடைபெற்ற இம்மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு, இந்திய திரு நாட்டில் வாழும் மக்களிடம் அருட்தந்தையர்கள் எவ்வாறு அன்பு செலுத்துவது என்பது குறித்தும், குருமார்கள் வாழ்வின் மகிழ்ச்சியும், மண்டலங்களில் நடைபெறும் அருட்பணியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பேசினார்.