தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா: முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தும் ஆட்சியர்! - வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா

நாகப்பட்டினம்: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா தொடங்க இருப்பதை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள் முன்னேற்பாடுகள் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா

By

Published : Aug 22, 2019, 6:53 AM IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா, வருகிற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் வருகை குறித்த துறைசார்ந்த அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

அரசுத்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

இக்கூட்டத்தில், காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர். அப்போது முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

வேளாங்கண்ணி ஆண்டு திருவிழா: முன்னேற்பாடுகளை துரிதபடுத்தும் ஆட்சியர்..!

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர், “திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்குக் குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகத்தின் சார்பாக 750 பணியாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட இருப்பதாகவும், காவல் துறை சார்பாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details