நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் மும்பை, வசாய் பகுதியைச் சேர்ந்த மராட்டிய மொழி பேசும் பக்தர்கள் 10 நாள் விரதம் இருந்து கொண்டாடப்படும், உத்திரியமாதா ஆண்டுப்பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேர்பவனி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், உத்திரியமாதா எழுந்தருளினர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் தேர் திருவிழா!
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் திருத்தேர் திருவிழா, உத்திரியமாதா ஆண்டு ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேர்பவனியில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ளாங்கண்ணி
முன்னதாக, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலியை செய்து வைத்தார். ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியே சென்று பேராலயத்தை வந்தடைந்தது.
இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.