பிரான்ஸ் நாட்டு சிறுமிக்கு அன்னை மரியாள் காட்சியளித்த தினத்தை உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமலோற்பவ அன்னை திருவிழாவாக கொண்டாடிவருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று சிறப்பு தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை சூசை மாணிக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை புனிதம் செய்து தொடக்கிவைத்தார்.