இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
சாம்பல் புதன்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி! - வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
![சாம்பல் புதன்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி! velankanni](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10660991-508-10660991-1613555412964.jpg)
velankanni
வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) சாம்பல் புதன் தொடங்கியது. இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைப்பெற்றது. இந்த திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். வழக்கமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசப்படும் சாம்பல் கரோனா பரவல் காரணமாக கைகளிலும், தலையிலும் தூவப்பட்டது.