தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து: 8 பெண்கள் படுகாயம் - 8 பெண்கள் படுகாயத்துடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி

நாகப்பட்டினம் அருகே லோடு வாகனம் கவிழ்ந்த விபத்தில் மீன் வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பிய 8 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

நாகை அருகே மீன் வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பிய லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து
நாகை அருகே மீன் வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பிய லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து

By

Published : Apr 4, 2022, 9:16 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் கும்பகோணத்திற்கு லோடு வாகனத்தில் சென்று வீடு வீடாக மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வழக்கம்போல மீன்களை விற்ற மீனவ பெண்கள் லோடு வாகனத்தில் நாகைக்கு திரும்பி திரும்பிக்கொண்டு இருந்தனர்.

நாகை மாவட்டம் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகே திடீரென லோடு வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் பயணித்த 8 பெண்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!

ABOUT THE AUTHOR

...view details