நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு! திரளான பக்தர்கள் பங்கேற்பு - Temples festival
நாகை: மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த ஸ்ரீ வீரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
temple
இதனை முன்னிட்டு, யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.