நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கடந்த மாதம் பெய்த அதி கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், வெள்ள நிவாரண உதவிக்காக 21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு பேரிடர் மாநிலமாக அறிவிக்க மறுப்பு தெரிவித்து கேட்ட தொகையை வழங்காமல் இருந்து வருகிறது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தியும், 21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.