தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - விசிக ஆர்பாட்டம் - நாகை மாவட்ட செய்திகள்

நாகை : மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

vck-protest-in-nagai
vck-protest-in-nagai

By

Published : Aug 8, 2020, 4:35 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாளபுத்தூர் கிராமத்தில் 14 வயது பள்ளி மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவாளபுத்தூர் கிராமத்தில் மாணவி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, அச்சிறுமிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு அரசு வழங்கிய கரோனா தடுப்பு நிதி, தன்னார்வலர்களிடம் பெற்ற நன்கொடையில் மோசடி செய்த நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைசாக்கடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details