தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிக பிரமுகரை ரவுடி பட்டியலில் சேர்ந்த காவல் துறைக்கு எதிராக புகார் - vck person Sirikali police to add to Rowdy's list

நாகை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரை ரவுடி பட்டியலில் சேர்த்து காவல் துறையினர் அச்சுறுத்துவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசிக பிரமுகர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
விசிக பிரமுகர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

By

Published : Mar 11, 2020, 5:20 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு இவர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது சீர்காழி நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அந்த வழக்கானது நிலுவையில் உள்ளதாக கூறி, சீர்காழி காவல் துறையினர் சந்திரமோகனை ரவடி பட்டியலில் சேர்த்துள்ளனர்.

விசிக பிரமுகர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

இது தொடர்பாக, இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியிடம் புகார் மனு அளித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி தன்னையும், தனது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க; மாணவர்களுக்கு பாலினப்பாகுபாடு குறித்த ஆலோசனையைத் தாருங்கள்' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details