நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இயங்கிவரும் சவுடு மண் குவாரியை மூடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சவுடு மண் குவாரியால் நெப்பத்தூர் கிராமத்தைச் சுற்றி நிலத்தடி நீர் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதால் உடனடியாக குவாரியை மூடக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.