தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தற்போதுள்ள இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்ததுதானா?'

நாகை: தற்போதுள்ள இரட்டை இலை என்பது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்த இரட்டை இலை தானா என நாகை விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Published : Mar 24, 2021, 4:45 PM IST

vck-candidate-aloor-shanavas-questuion-about-admk-symbol
vck-candidate-aloor-shanavas-questuion-about-admk-symbol

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக சார்பாகப் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ் வெற்றிபெற வேண்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ், "நாகை தொகுதியில் எதிர் தரப்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அவரது வேட்புமனுவில் பல கோடி சொத்து உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் நானோ தெருக்கோடியில் நிற்கிறேன். என்னிடம் பணமே இல்லை.

இரட்டை இலை குறித்து கேள்வி எழுப்பிய ஷாநவாஸ்

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தற்போது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்த இரட்டை இலையாகத்தான் உள்ளதா? எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு இலையும், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒரு இலையும், நடுவில் உள்ள காம்பு மோடியிடமும் இருக்கிறது" என விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details