மயிலாடுதுறை:மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலை எழுச்சியின் காரணமாக நான்கு கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி தாலுக்கா மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சென்றனர்.