மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுக்கா குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் பொறையார் பகுதியில் ஒரு இடம் வாங்கி, அந்த இடத்தை தனது மனைவி நாகலெட்சுமி பெயரில் பட்டா மாற்றம் செய்யவும், சிறு விவசாயிக்கான சான்று வழங்கக் கோரியும் பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து உள்ளார்.
பொறையாரில் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக, காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில், பாண்டியராஜன் பட்டா பெயர் மாற்றம் மற்றும் சிறு விவசாயிகளுக்கான சான்றுக்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. .
அதை தொடர்ந்து, விஜய் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்து உள்ளார். ரசாயனம் தடவிய 2 ஆயிரத்து 500 ரூபாயை விஜயிடம் வழங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க சொல்லி அனுப்பி வைத்து உள்ளனர்.
இந்நிலையில், விஜய் தனது மனைவி நாகலட்சுமியுடன் பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் பணத்தை கொடுத்துள்ளார்.