தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,500 ஆண்டுகள் பழமையான வானமுட்டி பெருமாள்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! - 1500 years old ancient statue

நாகை: மயிலாடுதுறை அருகே கோழிகுத்தியில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வானமுட்டி பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வானமுட்டி பெருமாளை தரிசிக்க அலைமோதிய பக்தர் கூட்டம்

By

Published : Aug 18, 2019, 12:59 AM IST

மயிலாடுதுறை அருகே உள்ள கோழிகுத்தியில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாளைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திமர வரதராஜ பெருமாள், மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அனந்த சயனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி எனும் கிராமத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.

வானமுட்டி பெருமாளை தரிசிக்க அலைமோதிய பக்தர் கூட்டம்
பிப்பல மகரிஷியால் நிர்மாணம் செய்யப்பட்ட இந்த ஆலயம், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். சோழர் காலத்து கல்வெட்டுகள் காணப்படும் இங்கே, 16 அடி உயரத்தில் ஒரே அத்தி மர திருமேனியில் பெருமாள் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறார். இங்கு தரிசனம் செய்தால், ஹத்தி பாபங்கள், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அத்திமர வானமுட்டி பெருமாளை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details