கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக இருந்துவருகிறது. இங்கு வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று காரைக்குடி நகரத்தார்கள் குலதெய்வ வழிபாடு நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கந்தவர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நடை பயணமாகவும், மாட்டுவண்டியிலும் வந்து வைதீஸ்வரன் கோயிலில் 10 நாட்கள் தங்கி தங்களது வேண்டுதலை நிவர்த்தி செய்வது வழக்கம்.