மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் புள்ளிருக்குவேளூர் என்ற ஸ்தலமான அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலில் குடமுழுக்கு ஏன்? தருமபுரம் ஆதீனம் விளக்கம்!
கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி ஆலய இறைவனிடம் வேண்டி கும்பாபிஷேக விழா நடத்தப்படுவதாக, தருமபுரம் ஆதீனம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, தற்போது யாகசாலை பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, இறைவனிடம் வேண்டி இக்குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது.
இந்த விழா யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகை தராமல் வீட்டிலிருந்தபடியே கண்டு தரிசிக்க வேண்டுமென்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டார்.