தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி! - கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டன

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ்  200க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டன.

மாடுகளின் வாய் மற்றும் கால்களை பாதிக்கும் கோமாரி நோய்
மாடுகளின் வாய் மற்றும் கால்களை பாதிக்கும் கோமாரி நோயா

By

Published : Jun 21, 2020, 1:26 AM IST

மாடுகளின் வாய், கால்களைப் பாதிக்கும் கோமாரி நோயால், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, சினை பிடிப்பு தடை, இறப்பு என கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், இந்த நோய் தாக்கிய மாடுகளிடமிருந்து, காற்றின் மூலமாகவும், அவற்றின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றின் மூலமாகவும் மற்ற மாடுகளுக்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. இந்த நோயைத் தடுக்கும் வகையில், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர், மல்லுக்குடி, வரவக்குடி உள்ளிட்ட ஏழு கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று கோமாரி தடுப்பூசி போட்டனார். அதனுடன் மாடுகளுக்கான காப்பீட்டும் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details