கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து கடைகளில் வாங்கி செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் 144 தடை - அத்தியாவசிய பொருள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - அத்தியாவசிய பொருட்கள்
நாகப்பட்டினம்: இன்று முதல் தமிழ்நாட்டில் 144 தடையால் சீர்காழியில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அத்தியாவசிய பொருள் வாங்க அலைமோதிய மக்கள்கூட்டம்
இந்நிலையில் சீர்காழி கடைவீதிகளில் அலைமோதிய கூட்டத்தால் கடைவீதிகள் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். பொருட்களின் விலையும் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நாளை மாலை 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயங்கும்!