டிப்பர் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு - டிப்பர் லாரி விபத்து
மயிலாடுதுறை: குத்தாலம் கடைவீதியில் டிப்பர் லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
கரூரில் இருந்து ஜல்லி எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி வந்த டிப்பர் லாரி குத்தாலம் கடைத் தெருவில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்த நபர் யார் என அடையாளம் தெரியாததால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரியையும் கரூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.