தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவணங்கள் இல்லாத தங்க நகை பறிமுதல் - தங்க நகைகள் பறிமுதல்

மயிலாடுதுறை: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

நகைகள்
நகைகள்

By

Published : Sep 8, 2021, 12:11 PM IST

சென்னையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளர் உதயச்சந்திரன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 1,600 கிராம் தங்க நகை இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் நகையை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் அந்த நகை சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான நகை என்பதும் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதியில் கொடுக்க வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சென்னையிலிருந்து ரமேஷ்குமாரை வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டணர். விசாரணையில் 300 கிராம் தங்க நகைக்கு மட்டுமே ஆவணம் இருந்தது தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட நகை

மேலும் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை (1,300 கிராம்) குறித்து திருச்சி வணிகவரித் துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில வரி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வணிகவரித் துறையினர் நேரில் வந்து ரமேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details