சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணிக் கூட்டத்தில் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள வத்தமடையான் குளத்தைத் தூர்வாருதல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஏக்கர் பரப்பளவிலுள்ள குளத்தைத் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை குளத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் மலர்தூவி கல்வெட்டைத் திறந்துவைத்த அவர், அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்குக் குளத்தை வழங்கினார்.
பின்னர், மரக்கன்றுகளை நட்டுவைத்த அவர், கருணாநிதி பிறந்த வீட்டில் உள்ள கருணாநிதி, முரசொலி மாறன், அஞ்சுகம் முத்துவேலர் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக திருக்குவளை வருகைதந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் பயன்பாட்டிற்கு குளத்தை வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாவட்டச் செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.