மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான கயல்விழியும் வினோதினியும் சிறுவயது முதலே கோலம் போடுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இவர்கள் கடந்த மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்கள் வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இந்நிலையில் இவர்கள் குடியரசு தினத்தையொட்டி இன்று(ஜன.26) தங்கள் வீட்டில் 30 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசியக்கொடியை வரைந்து அசத்தியுள்ளனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோலமாவுகளை பயன்படுத்தி நேர்த்தியாக வண்ணம் தீட்டியுள்ளனர்.