நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து திட்டச்சேரிக்கு 150 லிட்டர் பாண்டி சாராய பாக்கெட்டுகளை மூட்டையில் கட்டி கடத்தி வந்தது தெரியவந்தது.
150 லிட்டர் சாராயம் கடத்தல்: இருவர் கைது! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்
நாகப்பட்டினம்: புதுவையிலிருந்து திட்டச்சேரிக்கு 150 லிட்டர் சாராயத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்திவந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Two persons arrested for sale liquor
இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த கலையரசன், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், 150 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.