தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் சட்டவிரோத மது கடத்தல்: இருவர் கைது, 2500 பாட்டில்கள் பறிமுதல்

நாகை: புதுச்சேரியிலிருந்து இரண்டாயிரத்து 500 பாட்டில்கள் கடத்தி வந்த இருவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள், சொகுசு கார்
பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள், சொகுசு கார்

By

Published : Feb 27, 2020, 12:33 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை பகுதிகளில் மது பாட்டில்கள் கடத்துவதும், சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வதும் தொடர் கதையாக உள்ளது. இதில் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்தப்படும் பாட்டில்கள் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், நேற்று காலை காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜா தலைமையிலான சிறப்புப்படையினர் மயிலாடுதுறை அருகே கொடைவிளாகம் பகுதியில் சென்ற சொகுசுக் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள், சொகுசு கார்

இந்தச் சோதனையில் 17 சாக்குமூடைகளில் 2 ஆயிரத்து 500 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் மது பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கோடங்குடியை சேர்ந்த சின்னபிள்ளை மகன் மகேந்திரன், ஜெயகாந்தன் ஆகியோரை கைது செய்தனர். இதில் ஜெயகாந்தன் பிரபல கள்ளச்சாராய வியாபாரியான கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகனாவார்.

இச்சம்பவம் குறித்து, மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசார் வழக்குகப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாராயக் கடத்தலில் ஈடுபட்டதால் ஜெயகாந்தன் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கு முன்பு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் தொழுகை!

ABOUT THE AUTHOR

...view details