மயிலாடுதுறை: சோழம்பேட்டை அருகில் கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (51). தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்றுவிட்டு திரும்பும் வழியில் சீர்காழி பைபாஸ் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் எதிர்பாராவிதமாக குறுக்கே வந்ததில் ஏற்பட்ட விபத்தில், சுவாமிநாதனும் அவரது தாயார் பானுமதியும் (70) பலத்த காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.