நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் செலவில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பங்கேற்றார்.
தரங்கம்பாடியில் மீன்கள் விற்பனைக் கூடம் திறப்பு! - போகணுமா சட்டமன்ற உறுப்பினர்
நாகை: தரங்கம்பாடி பகுதியில் மக்கள் பயன்பட்டிற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு புதிய கட்டடங்களை எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்துவைத்தார்.
Two new buildings opened for public use in Tharangambadi
தரங்கம்பாடியில் 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொதுவிநியோக அங்காடி கட்டடத்தையும், அதனைத் தொடர்ந்து வெள்ளகோவில் மீனவக் கிராமத்தில் 19 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மீன்கள் விற்பனைக் கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.