தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை இரட்டைக் கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது! - nagapattinam

நாகப்பட்டினம்: முன்விரோதம் காரணமாக மயிலாடுதுறை அருகே நடைபெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துக்கு தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை காவல் நிலையம்

By

Published : Apr 22, 2019, 8:39 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவில், இளங்கோவன் என்பவர் கிராம நாட்டாமையாக நீடிப்பது தொடர்பான பிரச்னை, தேர்தல் முன்விரோதம் ஆகிய காரணங்களால் தங்கமணி (32), இளவரசன் (36) ஆகிய இரண்டு பேரைக் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்துள்ளார்.

இக்கொலையில், தொடர்புடையதாக 15க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திருமுருகன், வினோத், மான்கிங், கஜேந்திரன் ஆகிய நான்கு பேரை சமீபத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், வேல்முருகன் (32), நவீன்ராஜ் (20) ஆகிய இரண்டும் பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details