நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து ஜான் என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணி, வினோத், செல்வேந்திரன், டான்பாஸ்கோ, போஸ், உள்ளிட்ட ஆறு பேர் 1.ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடலில் கிடந்த திரவத்தை சாராயம் என அருந்திய மேலும் இரு மீனவர்கள் உயிரிழப்பு - கோடியக்கரை
நாகை: கோடியக்கரை அருகே கடலில் கிடந்த திரவத்தை சாராயம் என அருந்திய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இரு மீனவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து விட்டு இன்று காலையில் கரை திரும்ப வலைகளை எடுத்துள்ளனர். அப்போது வலையில் சிக்கியிருந்த கேனை எடுத்து பார்த்துள்ளனர். அதில் இருந்து சாராய வாடை வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் என நினைத்து அந்தோணி, வினோத், போஸ் மூவரும் குடித்துள்ளனர்.படகு கரை திரும்பியவுடன் தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பியபோது, அந்தோணி இறந்த நிலையில் கிடந்துள்ளார். மற்ற இருவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 7) உயிரிழந்தனர். மூன்று மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.