நாகை மாவட்டத்தில் முன்னதாக 47 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அதில், 45 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் சென்னையிலிருந்து திரும்பி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நாகையை அடுத்த கொட்டாரக்குடி, ஒக்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.
நாகையில் மேலும் இருவருக்கு கரோனா,பல பகுதிகள் மீண்டும் அடைப்பு
நாகை: மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மீண்டும் பல பகுதிகள் தடுப்புகள் கொண்டு அடைப்பு.
Corona positive cases
இதையும் படிங்க:சென்னையில் 700ஐ தாண்டிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!