கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் நாகை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 202ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனிடையே நாகை அரசு மருத்துவமனையில் கரோனா தனிப்பிரிவில் பணியாற்றிவந்த 36 வயது ஆண், 32 வயது பெண் செவிலியர் இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.