தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனை: தரங்கம்பாடி அருகே இருவர் கைது! - கஞ்சா விற்பனை

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.

Two arrested for cannabis selling near tharangampadi
கஞ்சா விறபனை செய்த இருவர் கைது

By

Published : Sep 5, 2020, 9:40 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, செம்பனார்கோவில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாதி உப்புநகரில், சுடுகாடு அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்த 1 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர்.

மயிலாடுதுறை ஹாஜியார் நகரைச் சேர்ந்த காமராஜ் (50), தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்நாதன் (30) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: வருமானம் இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details