நாகப்பட்டினத்தில் அமமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மஞ்சுளா சந்திரமோகனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், "லஞ்ச லாவன்யம் இல்லாத ஆட்சியை உருவாக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ளவும் அமமுகவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்காக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பெயரில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து அனைத்து சமுதாய மக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவருகிறார்" என்றார்.