கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பயன்தரும் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனை மீட்டெடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகாலத்தூர் கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் பணியாளர்களைக் கொண்டு, கஜா புயலால் சேதமடைந்த மரங்களை அகற்றி, அதே இடத்திலும் வேறு சில இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.