மயிலாடுதுறை: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் நவகிரகங்கள் தனித்தனியே வீற்றிருப்பது தனி சிறப்பாகும். இங்குள்ள குளக்கரையில் அரச மர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.
இந்த அரச மரத்தோடு பின்னி பிணைந்து வேப்ப மரமும் காட்சியளிக்கிறது. இன்று சங்கடாஹர சதுர்த்தியை முன்னிட்டு அரசமர விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அரசு - வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 1,008 கொழுக்கட்டை விநாயகருக்கு படையலிடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:யானைகளை தனிநபர்கள் வைத்திருக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!