மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமலிங்கம் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை ஆரத்தியெடுத்து வரவேற்ற திருநங்கைகள்! - பரப்புரை
நாகை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வேட்பாளர் ராமலிங்கம்
குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட முதல் வீதியில் தொடங்கி அம்மாவட்டத்தின் பல்வேறு வீதிகள் வழியாக நடைபெற்ற பரப்புரையில், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், என ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் சென்று பங்கேற்றனர். அதில் ஒரு பகுதியாக வேட்பாளர் ராமலிங்கத்தை திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்வு அங்கிருந்த தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.