நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் செம்பனார்கோவில் வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கிராமப்புறங்களை வளர்ச்சியடைய செய்வதற்கான அரசின் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தி பொதுமக்களை பயன்பெற வைப்பது, கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுதல், கிராமங்களில் தொழில் முனைவோரை உருவாக்குதல், இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சியளித்தல், மானியத்துடன் வங்கி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கத்துடன் கலை நிகழ்ச்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார அளவிலான அலுவர்களுக்கு திட்ட விளக்க கூட்டம் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் நாகை மாவட்ட அலுவலர் செல்வம் கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதில் வங்கி மேலாளர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் முறையான போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’