கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பயணிகள் ரயில்போக்குவரத்தை நிறுத்தியது. மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக தளர்வுகளை அறிவித்துவந்த நிலையில் 166 நாள்களுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 7) முதல் தமிழ்நாட்டில் சிறப்பு ரயில்கள் இயங்கத்தொடங்கியது.
166 நாள்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடக்கம்: பயணிகளின் வருகை அதிகரிப்பு! - நாகை மாவட்ட செய்திகள்
நாகப்பட்டினம்: 166 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரயில் இயக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Mayiladuthurai railway station
அந்த வகையில் மயிலாடுதுறை-கோவை, சென்னை-திருச்சி எஸ்க்பிரஸ் ரயில்கள் மட்டுமே மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. சென்னை, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் எப்போதும் போல் பயணிகள் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு, உடல்வெப்ப பரிசோதனை செய்து ரயில்வே நிலையத்திலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டனர். இயக்கப்படும் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.