தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை... 10ஆவது முறையாக திடீர் பள்ளம்!

நாகப்பட்டினம்: தரமற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தால் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலையில் 10வது முறையாக திடீர் பள்ளம்

By

Published : Apr 28, 2019, 7:36 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2009ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்தது. இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் 20 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்படைந்தது. புதிய பைப் மாற்றுவதற்கு ஒவ்வொரு முறையும் ரூ. 5 லட்சம் வரை செலவு ஆகிறது.

பாதாள சாக்கடையில் நகராட்சிக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுவரும் நிலையில் தற்போது மீண்டும் சின்னக்கடை வீதியில் 10ஆவது முறையாக பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தால் நகர்ப்புறத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறிவருகிறது. சாக்கடைக் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுவருகிறது.

சாலையில் 10வது முறையாக திடீர் பள்ளம்

இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்து, அரசு உடனடியாக இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details