தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு - Woman killed in tractor accident

நாகப்பட்டினம்: தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்துப்பகுதி
விபத்துப்பகுதி

By

Published : Jun 11, 2020, 3:31 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வாரக்குடி கிராமத்தில், அப்பகுதி பெண்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் மூதாட்டி பிச்சையம்மாள், மாலதி(35), கார்த்திகா(18) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், பிச்சையம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விபத்துப்பகுதி

இதையும் படிங்க:ஒரத்தநாட்டில் மினி வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details