தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலுக்குப்பின் அதிமுக காணாமல் போகும் - டி.ஆர்.பாலு - டி.ஆர்.பாலு

நாகப்பட்டினம் : தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளர்.

balu
balu

By

Published : Sep 29, 2020, 5:37 PM IST

திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக நாகை மாவட்டம், திருக்குவளைக்கு வந்த டி.ஆர்.பாலு, அங்குள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருக்கும் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ”நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக செயற்குழுவில் தீர்மானம் போட்டுள்ளது, காலம் கடந்து வந்த ஞானோதயம்” என்றார். ”அதிமுக ஒரு கட்சியே அல்ல, வெறும் காட்சிதான்” என விமர்சித்த அவர், ”தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியே காணாமல் போகும்” என்றார்.

தேர்தலுக்குப்பின் அதிமுக காணாமல் போகும் - டி.ஆர்.பாலு

இதையும் படிங்க:”செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என்றெண்ணிய திமுகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது” - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details