தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!! - மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம்-சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!!
தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம்-சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!!

By

Published : Nov 9, 2022, 2:25 PM IST

மயிலாடுதுறைதமிழ்நாட்டில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் லேசான முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில்
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

குறிப்பாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலம் என்பதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம்-சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!!

வரலாற்று சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றான டேனிஷ் கோட்டை தரங்கம்பாடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கோட்டையை சுற்றி கடல்நீர் அரிப்பு ஏற்பட்டு கோட்டை பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.

மேலும் உப்பனாற்றின் வழியே தண்ணீர் உள்ளே ஏறியுள்ள காரணத்தால் விளை நிலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:"அரசுப் பணிகளை தனியார்மயமாக்குவது சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும்" - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details