தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் வழங்கப்படும்'

நாகப்பட்டினம்: தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000, அரிசி, பருப்பு உள்பட இலவச தொகுப்புகளுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

-ration-cards-nagappatinam-collecter
-ration-cards-nagappatinam-collecter

By

Published : Mar 28, 2020, 10:49 PM IST

Updated : Mar 29, 2020, 8:28 AM IST

கரோனா காரணமாக அரசின் உத்தரவின்படி நியாயவிலைக் கடைகளில் இலவச தொகுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இலவச தொகுப்புகளை வழங்குவதற்காக அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கோட்டாட்சியர் மகாராணி, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர்

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், கரோனா காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, அரிசி, பருப்பு உள்பட இலவச தொகுப்புகள் வழங்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொதுமக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

அவரைத் தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாகப்பட்டினம் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஐந்து நாள்களில் 500 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, 400 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவால் பதிவாகிய வழக்குகள் எத்தனை?

Last Updated : Mar 29, 2020, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details