தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் பாடப்புத்தகங்களில் கவிஞர் வேதநாயகம் பிள்ளை

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறையில் அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழ்சங்கத்தினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

195-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
195-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு

By

Published : Oct 11, 2021, 12:32 PM IST

நாகப்பட்டினம்: கிபி 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய அவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார்.

தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப் போன்று தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார்.

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அவரது 195ஆவது பிறந்ததினம் இன்று(அக்.11) மயிலாடுதுறையில் அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.

தமிழுக்கு தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது.

அவரது திருவுருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், பொதுமக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும், வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது புதினத்தை தமிழ்நாடு பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறை தமிழ் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:BB DAY 7: லைக், டிஸ்லைக் மூலம் பற்றவைத்த பிக்பாஸ்... தொடங்கும் புதுச்சண்டை

ABOUT THE AUTHOR

...view details