தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணியில் குட்கா பறிமுதல்! - Gudkha seized

நாகை: வேளாங்கண்ணியில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, காலாவதியான உணவுப் பொருட்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

tobacco

By

Published : May 28, 2019, 1:58 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, வேளாங்கண்ணி ஆலயத்தைச் சுற்றியுள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, சிகரெட், ஹான்ஸ், பான்மசாலா, குட்கா, காலாவதியான உணவுப் பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் கைப்பற்றி, அவற்றை பாதுகாப்பான முறையில் அழித்தனர்.

வேளாங்கண்ணியில் குட்கா பறிமுதல்

அதனைத் தொடர்ந்து, பொருட்கள் கைப்பற்றப்பட்ட கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details