தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளவால்களைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமம் - பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடும் நாகை பெரம்பூர் கிராம மக்கள்

நாகை: வெளவால்களைப் பாதுகாப்பதற்காக, பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கடந்த 100 ஆண்டுகளாகத் தீபாவளி முதற்கொண்டு அனைத்து பண்டிகையின் போதும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

வெளவால்களைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமம்
வெளவால்களைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமம்

By

Published : Nov 12, 2020, 9:17 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். விவசாயம் நிறைந்த இக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராமத்தின் நடுவே உள்ள வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வசித்து வருகின்றன. இதனால் இப்பகுதியை வவ்வாளடி எனவும் அழைக்கின்றனர்.

வெளவால்களைத் தெய்வமாக வணங்கி வரும் இந்த கிராம மக்களின் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் ஆலமரம் உள்ள பகுதிக்குச் செல்ல முடியாது. மேலும் வெளவால்களைப் பாதுகாக்க, கிராம மக்கள் இணைந்து இளைஞர்கள் அடங்கிய வேட்டை தடுப்புக் குழு ஒன்றை அமைத்து, தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கத் தடைவிதித்துள்ளனர். பட்டாசு சப்தத்தால் வெளவால்கள் அச்சமடையும் என்பதால், இந்த கட்டுப்பாடு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் வெளவால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடவுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details