நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்கள் ஆகவும், மண்டகப்படி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நாளடைவில் இந்த முறை மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு மட்டும் மண்டகப்படி செய்யும் உரிமையும், அவர்களின் தெருக்களுக்கு சாமி ஊர்வலம் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே சுதந்திர தினத்தை புறக்கணித்த ஆதிதிராவிட மக்கள் - village people
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே கோயிலில் மண்டகபடி செய்யும் உரிமை மறுக்கப்பட்டதால் விரக்தியடைந்த ஆதிதிராவிடர்கள், தங்களது வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணித்தனர்.
avoid in Independence day
இதை எதிர்த்து பலகட்டங்களாகஆதிதிராவிட மக்கள் போராட்டங்கள், அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர்கள், சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில், வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.