மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குரூப் 4 தேர்வுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5799 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று (ஜூலை 24) காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் CBSC பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.