தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் பல்வேறு நலன்களுக்காக ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - TNCSC

நாகப்பட்டினம்: விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.என்.சி.எஸ்.சி தொழிற்சங்கத்தினர்

By

Published : May 7, 2019, 5:20 PM IST

இதில் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை போக்க வேண்டும், மின்னணு பணப்பரிமாற்றத்தை விரைவுபடுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எடை இழப்பைக் காரணம் காட்டி பணியாளர்களிடம் இழப்பீடு தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும், டி.என்.சி.எஸ்.சி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியில் அமர்த்த வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details